குமரி மாவட்ட வேளாண் இடுபொருள் வியாபாரிகள் சங்கம்

வரலாறு

குமரி மாவட்ட உரம் மற்றும் பூச்சி மருந்து வியாபாரிகளின் நலன் கருதி கடந்த 1972 – ம் ஆண்டு அன்றைய பிரதான உர வியாபாரிகளான திரு. முத்து கிருஷ்னபிள்ளை (முத்து கிருஷ்னா உர டிப்போ, கோட்டார்) அவர்கள் தலைமையில், திரு. சுப்பிரமணியம் (பாடகலிங்கம் & சன்ஸ், நாகர்கோவில்), திரு.ராபின்சன் (இண்டோ அமெரிக்கன் உரக்கடை, நாகர்கோவில்), திரு.சுயம்புலிங்கம் (கொட்டாரம்), திரு.அரிகிருஷ்ன பெருமாள் (அஞ்சு கிராமம்), திரு.சிவசுப்பிரமணிய பிள்ளை (தக்கலை), திரு.பத்மனாபன் (திட்டுவிளை),திரு.நீலகண்டபிள்ளை (NNP டிரேடர்ஸ், இறச்சகுளம்), திரு.மகேஸ்வரன் பிள்ளை (ஜெயா ஸ்டோர்ஸ், திக்கணங்கோடு), திரு. ஆழகிய நாயகம் (மேக்காமண்டபம்),திரு.இராமையா நாடார் (மேக்காமண்டபம்), திரு.நடராஜன் (மேக்காமண்டபம்), திரு. ஜாண்சன் (வேர்கிளம்பி), திரு. சாஸ்தா பிள்ளை (தலக்குளம்), திரு. மாதவன் பிள்ளை (கடுக்கரை), திரு. கிறிஸ்து தாஸ் (கருங்கல்) மற்றும் பல உர வியாபாரிகளின் முயற்சியால் 1975 –ம் ஆண்டு பதிவு பெறாத சங்கம் அமைந்தது. பின்னர் அச்சங்கம் புத்துயிர் பெற்று 1984 –ல் கோட்டாறு முத்துகிருஷ்னா உரக்கடை கட்டிடத்தை அலுவலகமாக கொண்டு சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதில் தலைவராக திரு.முத்து கிருஷ்ணபிள்ளையும், செயலாளராக திரு.பத்மனாபன் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கம் சிறப்பாக செயல்பட தொடங்கியது.