குமரி மாவட்ட வேளாண் இடுபொருள் வியாபாரிகள் சங்கம்

About

வரலாறு

குமரி மாவட்ட உரம் மற்றும் பூச்சி மருந்து வியாபாரிகளின் நலன் கருதி கடந்த 1972 – ம் ஆண்டு அன்றைய பிரதான உர வியாபாரிகளான திரு. முத்து கிருஷ்னபிள்ளை (முத்து கிருஷ்னா உர டிப்போ, கோட்டார்) அவர்கள் தலைமையில், திரு. சுப்பிரமணியம் (பாடகலிங்கம் & சன்ஸ், நாகர்கோவில்), திரு.ராபின்சன் (இண்டோ அமெரிக்கன் உரக்கடை, நாகர்கோவில்), திரு.சுயம்புலிங்கம் (கொட்டாரம்), திரு.அரிகிருஷ்ன பெருமாள் (அஞ்சு கிராமம்), திரு.சிவசுப்பிரமணிய பிள்ளை (தக்கலை), திரு.பத்மனாபன் (திட்டுவிளை),திரு.நீலகண்டபிள்ளை (NNP டிரேடர்ஸ், இறச்சகுளம்), திரு.மகேஸ்வரன் பிள்ளை (ஜெயா ஸ்டோர்ஸ், திக்கணங்கோடு), திரு. ஆழகிய நாயகம் (மேக்காமண்டபம்),திரு.இராமையா நாடார் (மேக்காமண்டபம்), திரு.நடராஜன் (மேக்காமண்டபம்), திரு. ஜாண்சன் (வேர்கிளம்பி), திரு. சாஸ்தா பிள்ளை (தலக்குளம்), திரு. மாதவன் பிள்ளை (கடுக்கரை), திரு. கிறிஸ்து தாஸ் (கருங்கல்) மற்றும் பல உர வியாபாரிகளின் முயற்சியால் 1975 –ம் ஆண்டு பதிவு பெறாத சங்கம் அமைந்தது. பின்னர் அச்சங்கம் புத்துயிர் பெற்று 1984 –ல் கோட்டாறு முத்துகிருஷ்னா உரக்கடை கட்டிடத்தை அலுவலகமாக கொண்டு சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதில் தலைவராக திரு.முத்து கிருஷ்ணபிள்ளையும், செயலாளராக திரு.பத்மனாபன் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கம் சிறப்பாக செயல்பட தொடங்கியது.

சங்க செயல்பாடுகள்

கடந்த 1996 –ம் ஆன்டு மாநில சங்கத்தின் 9-வது ஆண்டு விழாவை குமரி மாவட்ட சங்கம் ஏற்றெடுத்து கன்னியாகுமரி திரு.யோகிராம் சூரத்குமார் திருமண மண்டபத்தில் வைத்து மிக பிரமாண்டமாக நடத்தி தமிழகம் முழுவதும் பலருடைய பாராட்டையும் பெற்றது. பல சோதனைகளையும் கடந்து கடந்த 2008 –ம் வருடம் 25 வயதை பூர்த்தி செய்து அதனை 30.10.2008 –ல் வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடியது. அன்றைய தினமே சங்கத்தின் சொந்த கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்திலே முதல்முறையாக உரவியாபாரிகள் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் வாங்கிய பெருமையும் பெற்றது. அதற்கு அன்றைய சங்க பொறுப்பாளர்களாக இருந்த,

  • திரு. A. பத்பனாபன் - கௌரவ தலைவர் - திட்டுவிளை
  • திரு. S. ராஜபெருமாள் - தலைவர் - ஆரல்வாய்மொழி
  • திரு. A. ஜாண்சன் - துணைத்தலைவர் - முட்டைக்காடு
  • திரு. A. ராஜ் - செயலாளர் - வடசேரி
  • திரு. F. ஜார்ஜ் - துணை செயலாளர் - முட்டைக்காடு
  • திரு. R. ஆறுமுகம் - பொருளாளர் - கடுக்கரை

  • மற்றும் செயற்குழு உறுப்பினர்களான

  • திரு. M. திரவியப் பிள்ளை, கோட்டார்
  • திரு. S. ராஜகோபால், நாகர்கோவில்
  • திரு. R. சங்கரநாராயண பிள்ளை, தெரிசனம்கோப்பு
  • திரு. V. சுகுமாரன் நாயர், வள்ளியூர்
  • திரு. M. ஸ்ரீதர், திங்கள் நகர்
  • திரு. K. சின்னதம்பி, நாவல்காடு
  • திரு. N. நாராயணன், இறச்சகுளம்
  • திரு. G. சதீஷ்குமார், பார்வதிபுரம்
  • திரு. C. செல்வம், குமரன்குடி
  • திரு. V. ராஜன், சிறமடம்
  • திரு. T. முருகன், சென்பகராமன் புதூர்
  • திரு. M. சிவசுப்பிரமணியபிள்ளை, கடுக்கரை
  • திரு. V. தேவராஜ், குமரன்குடி
  • திரு. A. லூக்காஸ், மணலிக்கரை
  • திரு. A. கிருஸ்துதாஸ், குலசேகரம்
  • திரு. A. மாஹீன் அபுபக்கர், பார்வதிபுரம்

  • ஆகியோரின் தீவிர முயற்சியால் சங்கத்திற்கு புதிய கட்டிடம் வாங்கப்பட்டது. மேலும் பல சங்க உறுப்பினர்கள் தாரளமாக நிதி வழங்கினர்.

    ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சங்க ஆண்டு விழாவும், ஒவ்வொரு மாதமும் சங்க செயற்குழு கூட்டமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.